கூடுவாஞ்சேரியில் போதைப் பொருட்கள் உபயோகித்தாக தொடரடப்பட்ட வழக்கில் தனியார் கல்லூரி மாணவர்கள் 11 பேரை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது.
பொத்தேரியில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாணவர்களின் அறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா, கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மாணவி உள்ளிட்ட ட 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில்11 பேரை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது.