திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் 5 -ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் பிரபாகரன், “ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருவதைப்போல தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.