கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை நடமாட்டம் உள்ளததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் குட்டை ஒன்று உள்ளது. இதில், கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் குட்டையில் புதலையின் நடமாட்டம் தென்பட்டதால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.