ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தேசிய பொதுச் செயலரும், தேர்தல் பொறுப்பாளருமான தருண் சக், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்றுகட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஸ்ரீநகரில் பாஜக தேசிய பொதுச் செயலரும், தேர்தல் பொறுப்பாளருமான தருண் சக், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வேட்பாளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்றுகட்டமாக ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.