ஊரக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும், காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கதர் பவன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், கதர் பவன் விற்பனையகம் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்து, முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
காந்தி ஆசிரம பணியாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தொழில் கருவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “கதர் பொருட்களை அனைவரும் வாங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதை அடுத்து, அதன் விற்பனை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.