தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1 புள்ளி 2 கோடி பேர் முத்ரா கடன் திட்டம் மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.