விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் H ராஜா இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச் ராஜா, விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டால் அவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
”முருகர் மாநாட்டை வைத்து ஏமாற்றி தமிழகத்தில் அரசியல் செய்வதை ஹிந்துக்கள் ஏற்கமாட்டார்கள்’ என்றும், பழனியில் நடைபெற்றது ஆன்மீக ஹிந்து மாநாடே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சனாதன தர்மம் என்றால் அது ஹிந்து மதம் தான் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது என கூறிய அவர், ‘சனாதன ஹிந்து மதத்தின் எதிரி தான் உதயநிதிஸ்டாலின் எனறும் ராஜா சாடினார். முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு குடும்பசுற்றுலா சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.