ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரிட்டன் தனது இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டுமென ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடுகளிடையே நிரந்தர அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்கும் வகையில், 1945-ம் ஆண்டு 51 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது.
ஐநா சபையில், நீதி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு கிளை அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. அந்தக் கிளை அமைப்புகளில் பாதுகாப்பு கவுன்சில் அதிகாரம் பொருந்திய அமைப்பாகும்.
இந்த கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 5 நாடுகள் மட்டுமே இன்று வரை நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா கடந்த 16 ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஐநா அமைப்புகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் பிரிட்டன் தன்னுடைய இடத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டுமென்றும் ஐ.நா. முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்பூபானி தெரிவித்துள்ளார்.