தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் கணவன் பணத்தை இழந்த விரக்தியில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
வடகரை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி, தனது மனைவி மனோன்மணியின் நகையை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், உறவினர்களிடமும் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதனையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
இதுகுறித்து மனைவி காவல்நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த மனோன்மணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.