தவெக மாநாடு குறித்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விக்கிரவாண்டி போலீசார் வழங்கியுள்ளனர்.
நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வரும் 23 – ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக, 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மாநாடு நடத்த அனுமதி வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாநாட்டு மேடையின் அகலம், நீளம், மருத்துவ வசதி மற்றும் பார்கிங் வசதி உள்ளிட்டவை குறித்து விக்கிரவாண்டி போலீசார் கேள்வி எழுப்பி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கு, தவெக நிர்வாகிகள் அளிக்கும் பதிலை வைத்தே மாநாட்டிற்கு அனுமதி அளிக்கபடுமா அல்லது மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.