கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், மேற்கு வங்க அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மந்தகதியில் செயல்படுவதாக கூறி, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலிகுரியில் போலீஸார் அமைத்த தடுப்பை பாஜகவினர் அகற்ற முயன்றதால், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவரில் பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.
பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மேற்கு வங்க அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதாக கூறி, அலிப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக கொல்கத்தாவில் சட்டம், ஒழுங்கை நிறைவேற்ற தவறிய காவல் ஆணையர் வினீத் கோயல் பதவி விலக வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.