புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழும் போது வீடு, கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருப்பதாக புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை எதிர்த்து ஜாமியா உலேமா இந்த் உள்ளிட்ட பல்பேறு மாநிலங்களை சேர்ந்த அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா என காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
புல்டோசர்கள் வைத்து வீடுகளை இடிக்கும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரு சட்டம் வகுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணையை வரும்17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.