பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் உள்ளிட்டோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிதேஷ் குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், இந்தியாவிற்காக இரண்டாவது தங்கம் பெற்றுக் கொடுத்துள்ள தங்களது அசாதாரண முயற்சியால் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை @Thulasimathi11
அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள துளசிமதி முருகேசன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை மனிஷா இராமதாஸ் அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான இறகுப்பந்து விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திறன்மிக்க வெற்றியின் மூலம், நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ள மனிஷா இராமதாஸ் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், ஆண்களுக்கான இறகுப்பந்து SL4 விளையாட்டுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் சுஹாஸ் யத்திராஜ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வெற்றியின் மூலம், நாட்டு மக்களுக்கு பெருமையை சேர்த்துள்ளதோடு, இந்தியாவிற்கு ஐந்தாவது வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளீர்கள்.
பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின், கலப்பு இரட்டையர் வில்வித்தை விளையாட்டுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை ஷீதல் தேவி அவர்களுக்கும், வீரர் ராகேஷ் குமார் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இருவரும் இணைந்து கூட்டு முயற்சியின் பலனாக பெற்றுள்ள இந்த வெற்றியானது, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.