பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70 புள்ளி 59 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல் பாரா வில்வித்தை கலப்பு அணி காம்பவுண்ட் ஓபனில், இந்தியாவின் ஷீத்தல் தேவி – ராகேஷ் குமார் ஜோடி, இத்தாலி ஜோடியை 156-155 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம், 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.