பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் மற்றும் சுத்தமான ஆக்சிஜனை தரும் ஆக்ஸி டியூப்பை கண்டுபிடித்து மதுரை ஆராய்ச்சியாளர் அசத்தியுள்ளார்.
உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காற்று மாசால் சுத்தமான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் காற்று மாசு காரணமாக, 2019ம் ஆண்டுமுதல், ஆக்சிஜன் பார்கள் அமைக்கப்பட்டு சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், வரும் காலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போதும், பேரிடர் காலங்களில் மனிதர்களை காப்பாற்றும் வகையிலும் மதுரையை சேர்ந்த ஆராய்ச்சியாளரான மதுரை செல்வன், ஆக்ஸி டியூப் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் 8 மணி நேரம் சுத்தமாக காற்றை சுவாசிக்க முடியும் என்றும், மேலும், இந்திய மருத்துவகழகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் செல்வன் தெரிவித்துள்ளார்.