நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வனபேச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிலை ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மணிமுத்தாறு அருவிக்கரயில் அமைந்துள்ள வன பேச்சியம்மன் கோயிலில் கடந்த 23ஆம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இரு தினங்களுக்கு முன்பு திருவிழா கோலாகமாக தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சிலை ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட வன பேச்சியம்மன் உருவ சிலை சிங்கம்பட்டி கோயிலில் இருந்து வனபேச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. விழாவில் 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.