திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 225 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட முழு விவரங்கள் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது.
அதில், 2021 – 2024ஆம் ஆண்டு வரை அரசு நிகழ்ச்சிகளின் விளம்பரத்திறக்காக சுமார் 109 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021- 2024ஆம் ஆண்டில் வரை தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்காக சுமார் 13 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் நாளிதழில் விளம்பரம் செய்வதற்காக 111 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.