ஆந்திரப்பிரதேச மாநிலம், விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
விஜயவாடாவில் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர், மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ட்ரோன் மூலம் வழங்க இயலுமா என ஆய்வு செய்யப்பட்டது.
இதில்,ட்ரோன் மூலம் 8 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல முடியும் என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பல்பேறு பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.