பழனி அருகே பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கணக்கண்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியில் கரூர் மற்றும் மணப்பாறையை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட நிலையில், சீனிவாசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.