மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கே அதிக பயன் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள பயோ சிஎன்ஜி ஆலையை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சவாலானதாக இருந்தாலும், சென்னையின் மாடல் நன்றாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம், கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் மழை கை கொடுப்பதாகவும், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டு அதிக பயன் பெறும் என்றும் கூறினார்.