புதுச்சேரி மாநிலத்தில், மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வீடுகளுக்கான மின் பயன்பாட்டிற்கு மானியம் அறிவித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும், முதல் 100 யூனிட்டுகளுக்கு புதிய கட்டணமாக யூனிட்டுக்கு 2 ரூபாய் 70 பைசாவில், யூனிட்டிற்கு 45 பைசா மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு மானியமாக ஒரு யூனிட்டுக்கு 40 பைசா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரத்திற்கு கீழே உபயோகப்படுத்தப்படும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீத அரசு மானியம் தொடரும் என்றும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.