உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.
அதனை ஏற்று தற்போது வரை 71 சதவீத ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை ’மானவ் சம்பதா’ எனும் வலைதளத்தில் பதிவேற்றினர். இந்நிலையில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.