பாலியல் வன்கொடுமை சட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேறியதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான், பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா மத்திய பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு, இதுவரை 42 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கொல்கத்தா அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் கொலை வழக்கை திசைதிருப்பும் நோக்கில், மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக சிவராஜ் சிங் செளஹான் குறிப்பிட்டார்.
பணமோசடி மற்றும் பாலியல் வழக்கில் சிக்கி, திரிணாமூல் காங்கிரஸிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஷாஜஹான் மீது புதிய சட்டத்தின்கீழ் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுப்பாரா என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் கேள்வி எழுப்பினார்.