பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பரிசு பெற்றுள்ள ஒசூரை சேர்ந்த வீராங்கனைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பேட்மிண்டன் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நித்யஸ்ரீயின் தந்தை சிவன், நண்பர்களும், உறவினர்களும் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறினார்.
இன்னும் ஓரிரு நாட்களில் ஒசூர் வருகை தரும் நித்யஸ்ரீக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.