தேனியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த வழக்கை விசாரித்த தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம், முதியவருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.