புரூனே பயணம் பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புரூனே நாட்டிற்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, இன்று அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு நாடுகளின் தூதுக்குழுவினர் உடனான சந்திப்பின்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.