சென்னை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலை வளாகத்தில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதையறிந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
பின்னர் இந்த மிரட்டல் சம்பவம் புரளி என தெரியவந்ததை அடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.