திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர்கள் மன்னித்து விடுங்கள் என எழுதிவிட்டு சென்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
துறையூரில் குடும்பத்துடன் வசித்து வரும் இளங்கோ என்பவர் வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருசக்கர வாகனம் திருடுபோயிருந்தது.
மேலும் வீட்டின் சுவற்றில் மன்னித்துவிடுங்கள் எனவும் எழுதியிருந்தது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோ, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.