நீர் நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளையே பொதுமக்கள் விரும்புகின்றனர் என சிலை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூரில் சிலைகள் தயாரிக்கும் பணியில் கலைஞர் ஒருவர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர் இயற்கை வளத்திற்கும் நீர் நிலைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பவுடர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளையே மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் இயற்கையாக தயாரிக்கப்படும் சிலைகளை வாங்க மக்கள் முன் வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.