ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் நிலத்தில் கட்டிடப் பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கிருந்து அதிக அளவில் புகை எழுந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வந்து பார்த்த போது உடல் கருகிய நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
பின்னர் அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.