ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும்! - நடிகர் சரத்குமார்
Sep 5, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும்! – நடிகர் சரத்குமார்

Web Desk by Web Desk
Sep 4, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது கேரள நடிகர்களின் கடமை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியவர்,

சினிமா துறையில் உள்ள பிரச்சினைகளை அறியப்பட்ட இந்தியாவில் முதன் முறையாக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையில் சினிமா துறை சுகாதார சீர்கேடாக உள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரையும் அவதூறு பரப்பும் நோக்கில் குறிப்பிட்ட பெயரை சொல்லி ஹேமா கமிட்டி சொல்லவில்லை, கேரள நடிகர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

கேரள நடிகர்கள் தவறு செய்துள்ளார்களா? இல்லையா? என்பதை நிரூபிக்கப்பட வேண்டியது அவர்களது கடமை, சினிமாத்துறை மட்டுமல்ல காவல்துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது, நிர்பயா கொலை வழக்கு, கொல்கத்தா மருத்துவர் கொலை போன்ற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்று நடக்கின்றது.

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற எம்.ஜி. ஆர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

பிறர் என்ன செய்தார்கள் என்று யோசிப்பதே விட நாம் நம் மக்களை எவ்வாறு சீர்படுத்தி கொள்ள வேண்டும். எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி தான் நான் நினைப்பேன். என் மனைவி ஏன் அன்று சொல்லவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

என் மனைவிக்கு கடந்து போக கூடிய சக்தி இருந்ததால் அவர் அன்று சொல்லாமல் இருந்திருக்கலாம். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால் தான் இதை திருத்த முடியும்.

பிக்பாஸ் நடிகை யாரும் என்னிடம் புகார் கொடுத்தது கிடையாது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பது இல்லை, மற்றவர்களை போல் சாதாரண தலைவன் கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். ஹேமா கமிட்டி போல எல்லா இடத்திலும் கமிட்டி அமைக்க வேண்டும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது. நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தால் தவறுகள் நடைபெறாது” என்றார்.

Tags: Hema committee should be formed everywhere! - Actor Sarathkumar
ShareTweetSendShare
Previous Post

திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுபிகாரிடம் சிபிசிஐடி மீண்டும் விசாரணை!

Next Post

காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! – அமைச்சர் நமச்சிவாயம்

Related News

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies