அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியின் முன்னணி வீரர் ஜானிஜ் சினெர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப்போட்டியில் ஜானிக் சினெர் ரஷ்ய வீரரான மெத்வதேவ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சினெர் 6-2,1-6, 6-1,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.