சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
வெளிநாடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதாக திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் அவரது வீடு உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஜாபர்சாதிக்கின் குடும்பத்தினர் மற்றும் அவருடைய பினாமி பெயரில் இருந்த 55 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
போதைப்பொருள் விற்பனையால் கிடைத்த வருமானத்தால் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதால் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.