ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழையால், இரு மாநிலங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், , மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார்.
. விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் பயணித்தும், நேரடியாக களத்திற்கு சென்றும் ஆய்வு நடத்தினார். பயிர் தேசம் குறித்து விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு, மத்திய அமைச்சர் சவுகான் உடன் சென்றனர். இதனிடையே, வெள்ள சேதம் குறித்து இரு மாநில அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.