அரசு பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து மகா விஷ்ணு என்பவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மகா விஷ்ணு என்பவர் சொற்பொழிவாற்றியபோது பாவ – புண்ணியம், மறுபிறவி குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.
மேலும், முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக அவர் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில், பள்ளிகல்வித்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.