நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் - புத்துயிர் பெறுவது எப்போது?
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நலிந்து வரும் கோரை பாய் உற்பத்தி தொழில் – புத்துயிர் பெறுவது எப்போது?

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தில் நலிந்து வரும் கோரைப் பாய் உற்பத்தியை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்  உதவிக்கரம் நீட்ட வேண்டுமென, பாய் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய்கள், உடல் சூட்டை தணித்து, நிம்மதியான உறக்கத்தைத் தரவல்லது. இதனால் கோரைப் புற்களால் தயாரிக்கப்பட்ட பாய் வகைகளையே, வீடுகளில், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில், பாய் தயாரிப்பு, முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பாய்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த பகுதிகளில் பாய் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், இதற்காக கோரைப் புற்களை 6 மாத காலம் வளர்க்கின்றனர். பின்னர் அறுவடை செய்து, தரம் பிரித்து, 3 நாட்கள் வரை தண்ணீரில் நன்கு ஊற வைக்கின்றனர்.

அதன் பிறகு, கோரைப் புற்களின் மேலுள்ள தேவையில்லாத பக்கக் கதிர்களை அகற்றி, வெயிலில் உலர்த்துகின்றனர். பிறகு பல்வேறு நிறங்களைச் சேர்த்து, அடுப்பில் நீருடன் வேக வைத்து , மீண்டும் காய வைத்து, பல அளவுகளில், பல்வேறு வகையான பாய்களை தயாரிக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு செயல்முறைகளுக்குப் பின் உருவாக்கப்படும் கோரைப் பாய் தயாரிப்பு தொழில், முன்புபோல் இல்லையென்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாகரீக வளர்ச்சியால் பிளாஸ்டிக் பாய்கள், பஞ்சு மெத்தை உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால், பாரம்பரியமிக்க கோரைப் பாய் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருவதாகவும், இதனால் வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரவநல்லூர் பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் தற்போது வெறும் 20 குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைத் தவிர 40 குடும்பத்தினர், தங்கள் வீடுகளில் பாய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். பாய் உற்பத்தி தொழில் மெல்ல மெல்ல நலிவடைந்து வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags: Veeravanallurfennel grasstirunelveliMat manufacturingPadtamadai
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு!

Next Post

அடிபணிந்த எலான் மஸ்க் – பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies