தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 82 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர் தினத்தன்றும் நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவரால் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருதுக்கு நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை ஆகிய துறைகளில் மொத்தம் 82 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.கோபிநாத், முரளிதரன் ரம்யா சேதுராமன், ஏ.காந்திமதி, ஏ.எஸ்.ஸ்மைலின் கிரிஜா ஆகியோரும் அடங்குவர். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.