தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இடங்கள் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் கூறுவது ஏற்புடையது அல்ல என பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே உள்ள திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில், தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் கூறுகிறது. ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் கோவில் உள்ளிட்ட இடங்கள் தங்களுக்கு சொந்தமான இடங்கள் என வக்பு வாரியம் உரிமை கோருகிறது.
இதே போல கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில இடங்கள் தங்களுக்கு சொந்தம் என வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டில் வக்பு வாரியத்திற்கு சொந்தமாக 4- லட்சம் ஏக்கர் மட்டுமே நிலம் இருந்தது. ஆனால் இன்று 9,40,000 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு உள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் வக்பு வாரியம் நிலங்களுக்கு உரிமை கோருவது ஏற்கத்தக்கது அல்ல என ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்தார்.