கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என மரபணு மாதிரி பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பாக சந்தீப் ராய் என்ற போலீஸ் உளவாளியை சிபிஐ கைது செய்தது.
இதனிடையே, பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தகவல் வெளியானது. இந்தக் கோணத்தில் சிபிஐ விசாரித்து வந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனையில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சந்தீப் ராய் மீது விரைவில் விரிவான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.