மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 5 -ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் விழா துவங்கியது. இந்நிலையில், மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசத்தை அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்த வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.