நேதாஜி, ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் கொள்கைகளைத் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையாத்தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது : “தமிழக அரசியலில், தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரான ஐயா பி.கே. மூக்கையாத்தேவர் அவர்கள் நினைவு தினம் இன்று.
நேதாஜி, ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் கொள்கைகளைத் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர். பாராளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய மக்கள் பணிகள் ஏராளம்.
நதிநீர் இணைப்பு, கச்சத்தீவு மீட்பு எனத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். நீலித்தினல்லூர், கமுதி, உசிலம்பட்டி, ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவி, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம், உணவு என ஜாதி வேறுபாடு இல்லாமல் வழங்கியவர். உறங்காப் புலி, ஐயா மூக்கையாத் தேவர் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குவோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.