அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானதையடுத்து காவல்துறையினரிடம் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணு தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடிவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தம்மை பற்றி பல தவறான கருத்துகள் ஊடகங்கங்களில் வெளிவருவதாக தெரிவித்துள்ளார். தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என குறிப்பிட்டுள்ள மகா விஷ்ணு, ன்று மதியம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.