ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் திராவிட் அண்மையில் ஓய்வுபெற்றார். ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர், ஆலோசகர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்த ராகுல் தற்போது ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், உலகக்கோப்பைக்கு பின்னர் அடுத்த சவாலை எதிர்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.