அகிலமெங்கும் ஆட்சி - உலகம் முழுவதும் விநாயகர் வழிபாடு!
Sep 13, 2026, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகிலமெங்கும் ஆட்சி – உலகம் முழுவதும் விநாயகர் வழிபாடு!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைவத்தில் கணபதி, கணேசன், விக்னேஸ்வரர், பிள்ளையார் என்றும், வைணவத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்றும் போற்றப்படுகின்ற விநாயகப் பெருமான், கடல் கடந்தும் வெவ்வேறு நாடுகளில் அழகான பெயர்களில் வணங்கப்படும் கடவுளாக உள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நேபாளத்தில் விநாயகர் வழிபாடு உள்ளது. புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும், பிள்ளையாரை முதலில் வணங்கி விட்டே அனைத்து காரியங்களையும் செய்ய தொடங்குகிறார்கள். மேலும் ‘கணபதி ஹிருதயம்’ ஸ்லோகமும் பௌத்தர்களால் இன்றும் ஓதப் படுகிறது. நேபாளத்தில் சோண பத்திரர் என்கிற சாளக்கிராம விநாயகர் சிவப்பு நிறத்தோடு காட்சியளிக்கிறார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே சீனாவில் விநாயகர் வழிபாடு இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன. சீனர்கள், எந்திர வடிவில் வழிபடும் விநாயகரை குவன் ஹீபியின் எனப் பெயர் வைத்துள்ளார்கள். சீனாவின் துன்ஹவாங் குங்க்சியான் போன்ற மலைசரிவுகளில் உள்ள குடவரை கோயில்களில் விநாயகர் சிற்பங்கள் உள்ளன.

சீனாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற விநாயகருக்கு கான்கிட்டன் ஹாயக்ஷ என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் ‘பிள்ளை’ என்று பொருள்படும் ‘ஷோடர்’ என்னும் பெயராலும், வினாயக்ஷா என்றும் பிள்ளையார் அழைக்கப்படுகிறார்

ஜப்பானின் டுன் ஹவாங், குன்ஹசீன் ஆகிய நகரங்களில் உள்ள விநாயகர் யோக நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பானில் கணபதியின் இன்னொரு பெயர் கஞ்சிடேன் என்பதாகும். பெண் விநாயகியும், ஆண் விநாயகரும் கட்டிக் கொண்டிருக்கும் அபூர்வ விநாயகர் வழிபாடு ஜப்பானில் இன்றும் பிரசித்தம் .

மியான்மரில் உள்ள புத்த மடங்களிலும் விநாயகரைச் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் புதையுண்டு கிடந்த பல விநாயகர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த விநாயகரை காபூலில் தர்ஹா பீர் ரத்தன் நாத் கோவிலில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

திபெத்தில் கணபதியும் ஒரு காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். மேலும் விநாயகரைக் கணேசானி என்ற திருப்பெயருடன், பெண் உருவில் வழிபடும் வழக்கமும் திபெத் மக்களிடம் உள்ளது.

கி.பி. 5 ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து தாய்லாந்தில் விநாயகர் வழிபாடு இருந்து வருகிறது. தாய்லாந்தில் விநாயகரின் பெயர் பிரா பிகானெட் என்பதாகும். வெற்றியின் கடவுளாகவும், தடைகளை அகற்றுபவராகவும் தாய்லாந்து மக்கள் விநாயகரை வணங்குகின்றனர்.

கம்போடியாவில் உள்ள சோக்குஸ் விநாயகர், பிராசுஷேஸ் என்றும் வித்யபிரதாதா என்றும் அழைக்கப்படுகிறார்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேஷியாவிலும் காலம்காலமாகவே கணபதி வழிபாடு இருந்து வந்துள்ளது. இந்நாட்டு பணமாகிய ரூபியாவில் விநாயகரின் திருஉருவம் அச்சிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எகிப்து நாட்டில் கையில் சாவியுடன் விநாயகர் காட்சியளிக்கிறார். ரோமில் வணங்கப் படும் ஜேன்ஸ் என்ற கடவுள், ஒருமுக ஆனை வடிவில் கையில் சாவியுடன் அமைந்திருக்கிறது. மேலும், கிரேக்க நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்கள் எல்லாம் கணபதி வடிவில் தான் அமைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோயிலும், சித்திவிநாயகர் கோயிலும் குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோயிலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கணேசர் ஆலயமும் என நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன.

சிங்கப்பூரில் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலும், கியாஸ்சியாக் ஷாவில் இன்னொரு ஸ்ரீ வினாயகர் கோயிலும் உள்ளன. தென்னாப்பிரிக்காவில், சித்திவிநாயகர் கோயிலும் லேடிசுமிதிரேட்டாவில் கணேசர் கோயிலும் புகழ் பெற்றுள்ளன.

நாடெங்கும் விநாயகர் வழிபாடு சிறப்பாக விளங்கும் மலேயாவில் பஞ்சமுக விநாயகர் வழிபாடே பிரசித்தி பெற்றதாகும்.

அமெரிக்கப் பழங்குடி மக்கள் விநாயகரை அறுவடைக்கு உரிய கடவுளாக வழிபட்டு வருகின்றனர். மெக்சிகோ மற்றும் பெரு பகுதிகளில் மண்டையோட்டு மாலை மற்றும் எலும்பு அணிகலன்களுடன் விநாயகர் காணப்படுகிறார். அமெரிக்காவில் மாகாணத்துக்கு ஒரு விநாயகர் கோயில் இன்று புகழுடன் விளங்குகிறது

இங்கிலாந்தில் மகாவல்லப கணபதி உட்பட நிறைய விநாயகர் கோயில்கள் இருக்கின்றன. பிரான்சில் மாணிக்க விநாயகர் கோயிலின் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

‘ஹம்’ என்னுமிடத்தில் சித்தி விநாயகர், ஹஸ்டிஞ்சேன் என்னும் இடத்தில் வரசித்தி விநாயகர், ஹெய்ல்பிரான் என்னுமிடத்தில் ஸ்ரீ விநாயகர் என ஜெர்மனி மக்களும் விநாயகரை வழிபாட்டு வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல நாடுகளில் பிள்ளையார் வழிபாடு நீண்ட காலமாகவே இருந்துவருகிறது . இதுதான் பிள்ளையார் பெருமை .

Tags: Pilliyar temples in worldLord VinayakaVigneswarar
Share
Tweet
SendShare
Previous Post

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து : 12 பேர் உயிரிழந்த சோகம்!

Next Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies