விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சந்தைமேடு பகுதியில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டன்ர்.
அப்போது விவசாயி ஒருவர் தமது நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக எடுத்துவந்த 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரணை நடத்தினர்.