டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற 82 பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
நாடு முழுவதும் இருந்து 82 பேர் நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகினர். அவர்களை தமது இல்லத்துக்கு அழைத்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தேசிய கல்விக் கொள்கையின் அவசியம் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தார்.
நாட்டின் பன்முகத்தன்மையை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவர்களை அவ்வப்போது கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.