ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-4, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஏவுகணை அதன் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளுக்கு உட்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்புத் துறையின் திறனை மேம்படுத்தும் நோக்கில், அக்னி-4 ஏவுகணை விண்ணில் செலுத்தி ஒத்திகை பார்க்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.