நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரசித்தி பெற்ற மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பிரசித்தி பெற்ற மும்பை லால்பாக் ராஜா விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. லால்பாக் ராஜா விநாயகருக்கு தொழிலதிபர் ஆனந்த் அம்பானி சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடம் நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல நாக்பூர் தெக்டி விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தகடுஷேத் ஹல்வாய் விநாயகர் கோயிலில் பக்தர்கள் மனமுருக பாடல் பாடி, விநாயகரை வழிபட்டனர். முன்னதாக விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
புனே பவுசாஹேப் ரங்காரி கணபதி மண்டலில் திருநங்கைகள் மேளதாள முழக்கத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விநாயகர் ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.