சென்னை கொடுங்கையூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் ஐஸ்கிரீம் வண்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டு, பகுதி நேரமாக வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் தொழில் செய்து வந்துள்ளார். முத்தமிழ் நகரில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வரும் சுனில்குமார் என்பவர் வழக்கம்போல தனது ஐஸ்கிரீஸ் வண்டிக்கு சார்ஜ் செய்துவிட்டு தூங்க சென்றதாக தெரிகிறது.
அப்போது குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு ஐஸ்வண்டி வாகனம் முழுவதும் மின் கசிவு பரவி இருந்துள்ளது. முத்தமிழ் நகரில் கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், சுனில் குமார் வீட்டிற்கு வழக்கம்போல பால் பாக்கெட் போட மனோஜ் குமார் சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐஸ்வண்டியில் பரவியிருந்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வண்டி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.