கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதியதில், அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பயணிகளுடன் சுற்றுலா வேன் சென்றுள்ளது.
பைன் பாரஸ்ட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதனால், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததுடன், பலரும் படுகாயமடைந்தனர்.